சினிமா செய்திகள்

இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயார் மறைவு: திரையுலகினர் இரங்கல்!

Published

on

பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயார் காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் ராஜீவ் மேனனின் தாயார் கல்யாணி மேனன், காவேரி மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் இயற்கை எய்தினார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து ராஜீவ் மேனன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

மறைந்த கல்யாணி மேனன் அவர்களுக்கு ராஜீவ்மேனன் மற்றும் கருணாகரன் மேனன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த கல்யாணி மேனன் இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் 2 மணிக்கு சென்னை பெசன்ட் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரது இறுதி சடங்கிற்கு திரையுலகினர் பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மணிரத்னம் இயக்கிய பம்பாய், கடல் உள்பட ஒரு சில திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜீவ்மேனன், மின்சாரக்கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாளமயம் போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version