சினிமா செய்திகள்

ஆஸ்கர் அரங்கிற்குள் நுழைய ராஜமெளலி செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா?

Published

on

ஆஸ்கர் அரங்கிற்குள் நுழைய இயக்குநர் ராஜமெளலி செலவு செய்த தொகை குறித்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ‘RRR’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் இருவருக்கும் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இதனை உற்சாகமாக இந்திய திரை உலகினரும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவில் முகாமிட்டு இருந்த ராஜமெளலி இந்த பாடலை ஆஸ்கருக்கு எடுத்து செல்வதற்கே கிட்டத்தட்ட 80 கோடிக்கும் மேல் செலவு செய்ததாக தகவல் வெளியானது.

RRR Oscar Award Winners

விருது பட்டியலில் இருந்த இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் சந்திரபோஸ் இருவருக்கு மட்டுமே அரங்கிற்குள் நுழைய இலவச அனுமதி டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரங்கிற்குள் இயக்குநர் ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர், இவர்களது குடும்பம் என அங்கிருந்தவர்களுக்கு இலவச அனுமதி கிடைக்கவில்லை.

இவர்கள் விருது பட்டியலில் இடம்பெறாததால் ஆஸ்கர் அரங்கிற்குள் நுழைந்த ஒவ்வொருவருக்கும் சுமார் 21 லட்சம் செலவு செய்தே ராஜமெளலி அரங்கிற்கான டிக்கெட் வாங்கி இருக்கிறார். அதன்படி சுமார் 1.44 கோடி வரை ராஜமௌலி செலவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான விளக்கமும் ராஜமெளலி தரப்பு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version