சினிமா செய்திகள்

‘எம்.ஜி.ஆர் மகன்’ ரிலீஸ் தேதி இதுதான்: இயக்குனர் பொன்ராம் அறிவிப்பு!

Published

on

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்து வந்த ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்தன என்பது தெரிந்ததே.

மேலும் இந்த திரைப்படம் சமீபத்தில் சென்சார் சான்றிதழ் பெற்றது என்பதும் சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ’யு’ சான்றிதழ் அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது, ஏற்கனவே டீசர் டிரைலர் உள்பட அனைத்து இந்த படத்தின் அனைத்து புரமோஷன்களும் முடிவடைந்து விட்ட நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனை அடுத்து இயக்குனர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏப்ரல் 23 அன்று ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டு, எம்ஜிஆர் மகன் படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சசிகுமார் ஜோடியாக மிருணாளினி என்ற நடிகை இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பாடகர் அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார் ஏற்கனவே ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’ரஜினிமுருகன்’ ’சீமராஜா’ ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம்க்கு இது அடுத்த வெற்றிப்படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

seithichurul

Trending

Exit mobile version