சினிமா செய்திகள்

ஓடிடி-யால் மரியாதை போய்டுச்சு… கொதிக்கும் இயக்குநர் பேரரசு..!

Published

on

திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவதால் திரைப்படங்களுக்கு எந்த மரியாதையும் இல்லாமல் போய்விட்டது என இயக்குநர் பேரரசு வேதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னரும் பல திரைப்படங்கள் திரை அரங்கங்களில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளங்களான அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் என வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக தயாரிப்பாளர்களுக்கும் திரை அரங்க உரிமையாளர்களுக்கும் பல கட்ட மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

நடிகர் தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களும் நேரடி ஓடிடி வெளியீட்டை விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்தும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. ஓடிடி தளங்களும் சற்றும் தாமதிக்காமல் பல வித கண்டிஷன்களுடன் படங்களைக் கைப்பற்றுவதிலேயே குறியாக உள்ளது.

இந்நிலையில் திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாவது குறித்து இயக்குநர் பேரரசு கூறுகையில், “ஓடிடி வெளியீடு என்பது சினிமா துறை சார்ந்த பலருக்கும் நஷ்டம் தான். திரை அரங்கங்களில் படம் பார்ப்பது தான் அனுபவம். அதற்காகத் தான் மக்கள் திரை அரங்கங்களை இன்னும் விரும்புகிறார்கள். ஆனால், ஓடிடி வருகை திரைஅரங்கங்களுக்கு வந்த சாபக்கேடு. நடிகர்களுக்கு மட்டுமல்ல தயாரிப்பாளர்களுக்கும் ஓடிடி வருகையால் மரியாதை இல்லாமல் போய்விட்டது” என்றுள்ளார்.

Trending

Exit mobile version