தமிழ்நாடு

சர்ச்சை கருத்தால் கைதாகிறாரா இயக்குநர் பா.ரஞ்சித்?

Published

on

ராஜராஜ சோழன் குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் விரைவில் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித், மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர். அவரது ஆட்சியிலிருந்துதான் ஜாதி பிளவு கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்களின் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன் என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் இவ்வாறு பேசியது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெரும் விவாதத்தையும் இது ஏற்படுத்தியது. இதனையடுத்து பா.ரஞ்சித்துக்கு எதிராக ஒரு தரப்பும், எதிராக ஒரு தரப்பும் விவாதம் செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ராஜராஜ சோழனை இழிவு படுத்தும் வகையில் பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. இதனையடுத்து பா.ரஞ்சித் இந்த வழக்கு குறித்து வழக்கறிஞர்களுடன் பேசி வருவதாகவும், முன் ஜாமீன் கோரலாம் எனவும் பேசப்படுகிறது.

Trending

Exit mobile version