Connect with us

தமிழ்நாடு

ராஜ ராஜ சோழன் விவகாரம்: மீண்டும் மீண்டும் பேசி சர்ச்சையை கிளப்பும் ரஞ்சித்!

Published

on

சமீபத்தில் ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்து வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கு சென்று முன்ஜாமீன் பெற்றிருக்கும் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது மீண்டும் அந்த விவகாரம் குறித்து பேசி சர்ச்சையுல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

ராஜ ராஜ சோழன் குறித்து விமர்சித்த ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கும் முன்னர் நீதிபதிகள் அவரிடம், ஆயிரம் ஆண்டுகள் கழித்து ராஜராஜ சோழன் குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன? இன்றும் அரசு மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி அதற்கான நிவாரணங்களை வழங்குகிறது. அவ்வாறு இருக்கும்போது நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக ராஜராஜ சோழனை மட்டும் குறிப்பிடுவது ஏன்? பேசுவதற்கு பல்வேறு விஷயங்கள் இருக்கும் போது மக்கள் கொண்டாடும் மன்னன் ஒருவனை இவ்வாறு பேசுவது ஏன் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியும் இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியும் முன்ஜாமீன் வழங்கினர்.

இந்நிலையில் நேற்று புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய பா.ரஞ்சித்திடம் ராஜராஜசோழன் பற்றி பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், நான் பேசியதால் மற்றவர்கள்தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றார்கள். ராஜராஜன் உயிரோடு இருந்திருந்தால் என் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டிருப்பார். வாருங்கள் விவாதம் செய்யலாம் என்று கூறியிருப்பார். ஆனால், ராஜராஜன் பேரன்கள் வேறு வேறு சாதியில் இருப்பதால் அந்த பேரன்கள் எல்லாம் மன உளைச்சல் அடைகிறார்கள்.

நான் அம்பேத்காரின் வளர்ப்பு, எவனுக்கும் பயப்படமாட்டேன். நான் இப்படித்தான் பேசவேண்டும் என்று நீ வரையறை செய்யாதே. எனக்கு குரலே கிடையாதா? என் குரலை பதிவு செய்வேன். என்னை கோபப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என ரஞ்சித் பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு நீதிமன்ற உத்தரவை மீறும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் அமைந்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!