சினிமா செய்திகள்

‘தாங்க்யூ ஸ்வீட்டி’- சிவகார்த்திகேயனைக் கொஞ்சும் ‘தளபதி’ இயக்குநர்..!

Published

on

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கொஞ்சிக் கொண்டு நன்றி சொல்லிய விதம் தற்போது ட்விட்டரில் றெண்ட் ஆகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஆன டாக்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது டாக்டர் படத்துக்கான டப்பிங் பணிகளை முடித்து உள்ளதாக சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுக்காக ட்விட்டரில் அறிவித்திருந்தார். படத்தை தயாரித்து, நடித்து, பாடல் எழுதி எனப் பல பணிகளை சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் செய்துள்ளார்.

இவை அனைத்துக்கும் நன்றி தெரிவித்து இயக்குநர் நெல்சன், “தாங்க்யூ ஸ்வீட்டி… சிவகார்த்திகேயன். எங்களிடம் மிகவும் இனிமையாக நடந்து கொண்டு இந்தப் பயணத்தை மிகவும் ஞாபகார்த்தமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் ஆக ஆக்கியதற்கு நன்றி. விரைவில் திரை அரங்கங்களில் டாக்டர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன்- நெல்சன் நட்பு குறித்து ட்விட்டரில் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். நெல்சன் தொடர்ந்து தற்போது தளபதி விஜய்-65 படத்துக்கான இயக்குநர் வேலையைத் தொடங்கிவிட்டார். டாக்டர் படத்தை தயாரித்தும் நடித்தும் உள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து வாள் என்னும் படத்தை தயாரித்து வருகிறார். இவரது நடிப்பில் அயலான் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. டான் படத்துக்கான படப்பிடிப்புகளில் விரைவில் சிவகார்த்திகேயன் இணைய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version