சினிமா செய்திகள்

‘இந்தத் தவறை இனிமேல் செய்யவே மாட்டேன்’- மாஸ்டர் தவறால் மனம் வாடிய லோகேஷ் கனகராஜ்

Published

on

மாஸ்டர் திரைப்படத்தில் செய்த தவறை இனி ஒரு போதும் திரும்ப செய்யவே மாட்டேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருப்வான மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 13-ம் தேதி வெளியானது. கொரோனா கட்டுப்பாடுகள் உடன் படம் வெளியானாலும் வசூலைப் பொறுத்த வரையில் வழக்கமான விஜஹ்ய் படத்தைப் போலவே வெற்றிப் படமாகவே மாஸ்டர் உள்ளது. ஆனால், விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களையே மாஸ்டர் திரைப்படம் பெற்றுள்ளது.

இதுகுறித்து முதன் முறையாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மனம் திறந்து பேசி உள்ளார். லோகேஷ் கனகராஜ் கூறுகையில், “ஒரு திரைப்படத்தைப் பொறுத்த வரையில்  நேர்மறை, எதிர்மறை என எந்த விமர்சனம் வந்தாலும் தேவையானதைக் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். படம் நீளமாக உள்ளது என திரைப்படம் பார்த்த பலரும் பெரிய குற்றச்சாட்டாக முன் வைத்தனர். விஜய் மற்றும் விஜய் சேதுபதி என இரு பெரும் நடிகர்கள் நடிப்பதால் இருவருக்கும் சம பங்கு அளிக்கப்பட வேண்டும் என முயற்சித்தேன்.

அதன் காரணமாகவே படத்தின் நீளம் அதிகமாகிவிட்டது. இனி இந்தத் தவறை வேறு எந்த படத்திலும் செய்யவே மாட்டேன். ரசிகர்களின் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் கமல்ஹாசனைக் கொண்டு விக்ரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். விஜய் 66 படத்திலும் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இணைய வாய்ப்பு உள்ளதாகவே கூறப்படுகிறது.

Trending

Exit mobile version