சினிமா செய்திகள்

’சீயான் 60’ படப்பிடிப்பில் பிறந்த நாளை கொண்டாடிய கார்த்திக் சுப்புராஜ்: வைரல் புகைப்படங்கள்!

Published

on

தமிழ் திரையுலகின் இளம் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்பராஜ் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டரில் நான் பணிபுரிந்த இயக்குனர்களில் மிகவும் சிறப்பான இயக்குனர்களில் ஒருவர் என கார்த்திக் சுப்புராஜ்க்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

பீட்சா என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ் அதன்பின்னர் இறைவி, பேட்ட உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் இயக்கி முடித்துள்ள ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடித்துவரும் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது கார்த்திக் சுப்புராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து விக்ரம் மற்றும் சக கலைஞர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

’சீயான் 60’ படத்தை இயக்கி முடித்து விட்டு மீண்டும் ரஜினிகாந்த் படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version