சினிமா செய்திகள்

இயக்குனர் ஜனநாதன் வீட்டில் இன்னொரு மரணம்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

Published

on

இயற்கை என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான ஜனநாதன் அதன் பின்னர் பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை, ஆகிய படங்களை இயக்கினார். தற்போது லாபம் என்ற திரைப்படத்தை ஜனநாதன் இயக்கி முடித்துள்ள நிலையில் அந்த திரைப்படம் வெளியாகும் முன்பே உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

இயக்குநர் ஜனநாதனின் மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர் இரங்கல் செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு தமிழ் திரையுலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இயக்குனர் ஜனநாதன் மறைந்து ஒரு வாரம் கூட முடியாத நிலையில் அவருடைய வீட்டில் இன்னொரு மரணம் ஏற்பட்டுள்ளது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் ஜனநாதனின் தங்கை லட்சுமி என்பவர் ஜனநாதனின் மறைவு செய்தி கேட்டு மயக்கமுற்றார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது இது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version