சினிமா செய்திகள்

இயக்குனர் ஹரி மருத்துவமனையில் அனுமதி: படப்பிடிப்பு குழுவினர்களுக்கு கொரோனா பாதிப்பா?

Published

on

இயக்குனர் ஹரி தற்போது அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானிசங்கர் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ராதிகா, யோகி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர்

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பழனி அருகே விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு குழுவினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து படக் குழுவில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

இந்த நிலையில் இயக்குனர் ஹரிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் பழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இயக்குனர் ஹரிக்கு கொரோனா பாதிப்பு என்பது உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இயக்குனர் ஹரி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Trending

Exit mobile version