சினிமா செய்திகள்

சேரனின் ‘ஆட்டோகிராப் 2’: மீண்டும் களமிறங்குகிறார் சேரன்!

Published

on

இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ‘ஆட்டோகிராப் திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை பார்த்த ஒவ்வொருவரும் தங்களுடைய கல்லூரி காலத்தில் நடந்தது போலவே இருப்பதாக கூறியதால் தான் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது

சேரனுடன் கோபிகா, ஸ்நேகா மற்றும் மல்லிகா என மூன்று நாயகிகள் நடித்து இருந்தனர் என்பதும் இந்த படம் பல விருதுகளையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஆட்டோகிராப் படத்திற்கு பிறகுதான் இன்னும் ஒரு மிகப்பெரிய வெற்றியை சந்திக்கவில்லை என்று வருத்தத்துடன் கூறி இருந்தார்

அந்த வகையில் தற்போது மீண்டும் ’ஆட்டோகிராப் 2’ படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்டோகிராப் படத்தில் அவரே நடித்து இயக்கி இந்த நிலையில் ’ஆட்டோகிராப் 2’ படத்தில் ஒரு இளம் நடிகரை நடிக்கவைக்க சேரன் முடிவு செய்திருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பம் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது

பல வெற்றி படங்களில் இரண்டாம் பாகம் ஹிட் ஆகியுள்ள நிலையில் ஆட்டோகிராப் படத்தின் இரண்டாம் பாகமும் ஹிட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Trending

Exit mobile version