சினிமா செய்திகள்

அமலாபால், சமந்தா, இமான், தனுஷை அடுத்து பாலா: தொடரும் கோலிவுட் விவகாரத்துக்கள்!

Published

on

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக பிரபலங்கள் திடீரென தங்கள் துணையை விவாகரத்து செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகைகள் சமந்தா, அமலாபால், நடிகர் தனுஷ் இசையமைப்பாளர் இமான் உள்பட ஒருசில சமீபத்தில் தங்கள் துணையை விவாகரத்து செய்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது இயக்குனர் பாலா தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

பிரபல இயக்குனர் பாலா, முத்துமலர் என்ற பெண்ணை கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் தற்போது சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய விருது பெற்ற ’நான் கடவுள்’ உள்பட பல தரமான படங்களை இயக்கிய பாலாவின் வாழ்வில் திடீரென விவாகரத்து என்ற திருப்பம் ஏற்பட்டதால் கோலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

 

Trending

Exit mobile version