கிரிக்கெட்

தோனி அறிமுகம் ஆனபோதே என் கதை முடிந்துவிட்டது- தினேஷ் கார்த்திக் ஓப்பன் டாக்!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியில் தோனி அறிமுகம் ஆன போதே அங்கு எனக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டன என முதன்முறையாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்தில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது லண்டனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்தத் தொடரின் ஆங்கில வர்ணனையாளர் ஆக முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்-கும் லண்டனில் தான் இந்திய அணி உடன் சென்று வர்ணனை செய்து வருகிறார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ராவின் யூட்யூப் சேனலுக்கு தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்து இருந்தார். அதில் டிகே பேசுகையில், “நான் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பவன். ஒரு இடத்தில் தேங்கிவிடவே மாட்டேன். தொடக்க ஆட்ட வீரர், மிடில் ஆடர், தற்போது வர்ணனையாளர் என ஓடிக் கொண்டே இருக்கிறேன். நான் ஒரு தொடக்க வீரராக சிறப்பாக விளையாட முடியும் என தோனியும், டிராவிட்-ம் கூறுவர்.

ஆனால், இந்திய அணிக்குள் தோனி என்ற வீரர் ஒரு புயலைப் போல நுழைந்தார். மக்களை தன் ஆட்டத்தால் கவர்ந்தார். ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகவும் சிறப்பாக அமைந்துவிட்டால் அவர் அந்தத் தலைமுறையின் நாயகன் ஆகிவிடுவார். தோனி நுழைந்த போதே எனக்கான கதவுகள் மூடிவிட்டன. அப்போதே எனக்கு என் நிலை தெரிந்துவிட்டது” எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

Trending

Exit mobile version