தமிழ்நாடு

பதவியேற்றவுடன் பார்வையிட்ட திண்டுக்கல் ஐ லியோனி!

Published

on

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக சமீபத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல் ஐ லியோனி அவர்களை நியமனம் செய்தார் என்பதும் அவருடைய நியமனத்திற்கு பாமக, அதிமுக உள்பட பல கட்சியின் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக பதவி ஏற்பதில் லியோனிக்கு சிக்கல் இருந்ததாகக் கூறப்பட்டாலும் சமீபத்தில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து இந்த பதவியை தான் சரியாக பயன்படுத்துவேன் என்றும் பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் மத்திய அரசு என்ற வார்த்தை தமிழ்நாடு பாட நூல்களில் இருந்து நீக்கப்பட்டு ஒன்றிய அரசு என்ற வார்த்தை சேர்க்கப்படும் என்றும் கலைஞர் கருணாநிதியின் எழுத்து பணி அரசியல் பணி ஆகியவை குறித்து ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடங்கள் வைக்கப்படும் என்றும் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியது

இந்த நிலையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தலைவராக பொறுப்பேற்ற திண்டுக்கல் ஐ லியோனி இன்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் கீழ் இயங்கும் அடையாறு புத்தக சேமிப்புக் கிடங்குகளை பார்வையிட்டார். அவருடன் மேலாண்மை இயக்குனர் மணிகண்டன் ஐஏஎஸ் அவர்களும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் அலுவலகங்களுக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்து கொண்டதாகவும் பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து தாகவும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த டுவிட்டில் திண்டுக்கல் ஐ லியோனி கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கீழ் இயங்கும் அடையார் புத்தக சேமிப்பு கிடங்குகளை பார்வையிட்டேன்.மேலாண்மை இயக்குனர் மணிகண்டன் IAS உடனிருந்தார். நடைபெறும் பணிகள் பற்றி தெரிந்து கொண்டேன்.பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தேன்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version