தமிழ்நாடு

‘ஒரு கேஸ் சிலிண்டர் விலை ரூ.5,000- அது நம்ம ஆட்சியில இலவசம்’- திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சால் ஆடிப்போன மக்கள் #ViralVideo

Published

on

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு கேஸ் சிலிண்டர் விலை 5,000 ரூபாய் என்றும், அது அதிமுக ஆட்சியில் இலவசமாக கொடுக்கப்படும் என்றும் பேசியுள்ளார் தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அவரின் இந்த ‘பகீர்’ கிளப்பும் பேச்சால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. 

தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அமைச்சர் சீனிவாசன், ‘உங்களுக்குத் தெரியும், ஒரு கேஸ் சிலிண்டர் விலை 4,500 முதல் 5,000 ரூபாய் வரை இருக்கிறது. இதை வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்களை இலவசமாக கொடுக்கும் அருமையான திட்டத்தை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்த உள்ளது. 

அதேபோல மாநிலத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களிலும் உள்ள குடும்பத் தலைவிக்கு மாதம் 1,500 ரூபாய் கொடுக்கும் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளது அதிமுக’ என்று பேசினார். அமைச்சரின் பேச்சால் கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. 

முன்னதாக அமைச்சர் சீனிவாசன், ‘சூரிய சக்தி அடுப்பு கொடுக்க அதிமுக அரசு திட்டம் வைத்துள்ளது. இந்த அடுப்பு வந்தவிட்டால் மின்சாரத் தேவை இருக்காது, அடுப்புக்கு பெட்ரோல் ஊற்ற வேண்டிய தேவையும் இருக்காது. சூரிய ஓளி மூலம் அடுப்பு தானாக எரியும். இது ஒரு அருமையான திட்டம்’ என்று பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

அவரின் இந்த உளறல் பேச்சு, கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், இது குறித்தான காணொலியும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

seithichurul

Trending

Exit mobile version