தமிழ்நாடு

தேனி தொகுதியில் யார் போட்டி: தினகரன் மனைவி அனுராதாவா? விவேக்கா?

Published

on

இந்த மக்களவை தேர்தலை எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி வைத்து எதிர்கொள்கிறது அமமுக. இதில் எஸ்டிபிஐ கட்சி மத்திய சென்னை தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது. இதில் அமமுக சார்பில் தேனி தொகுதியில் யார் போட்டியிடுகிறார் என்பது தற்போது விவாதமாகியிருக்கிறது.

தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ்-இன் மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் நிலையில், சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேனி தொகுதி குறித்த கேள்விக்கு, தேனி என் தொகுதிதான், என்னை கூட அங்க நிக்க சொல்லி கட்சிக்காரங்க கேட்குறாங்க. நான் கூட அங்க நிக்கலாம் என பதில் அளித்து தென் மாவட்ட அரசியலை சூடாக்கினார்.

இந்நிலையில் தேனி தொகுதியில் தினகரனின் மனைவி அனுராதா அல்லது இளவரசியின் மகனும் ஜெயா டிவியின் சிஇஓவுமான விவேக் போட்டியிட வாய்ப்புள்ளதாக அமமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. கடந்த இருபது நாட்களில் ஐந்து முறை விவேக் தேனி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் தினகரனின் மனைவி அனுராதா கூட தேனி தொகுதியில் களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்து தான் தினகரன் தேனி என் தொகுதி என கூறியிருப்பதாக அமமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version