தமிழ்நாடு

பாஜக தலைவர்களை சந்திக்க தினகரன் தூதுவிட்டார்: தமிழிசை பேட்டி!

Published

on

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரனை சந்தித்து தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைப்பது தொடர்பாக பேசியதாக டிடிவி தினகரன் தரப்பு கூறி வருகிறது.

ஆனால் தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைப்பது தொடர்பாக தினகரனிடம் பேசவில்லை எனவும், தினகரன் தான் தன்னை சந்திக்க பொதுவான நண்பர் ஒருவர் மூலமாக முயன்றதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை அம்மா மாக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் தினகரன் பாஜக தலைவர்களை சந்திக்க தூதுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய டிடிவி தினகரன், ஓ.பன்னீா்செல்வம் தன்னை சந்தித்ததாக டிடிவி தினகரன் கூறினாா். அந்த சந்திப்பு குறித்து ஓ.பன்னீா்செல்வம் உரிய விளக்கத்தையும் அளித்து விட்டாா். துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மேற்கொண்டது தா்மயுத்தமா? தர்ம சங்கடமான யுத்தமா? என்று எனக்கு தொியாது. அது அதிமுகவிற்குள் நடைபெறும் விவகாரம். டிடிவி தினகரன் பாஜக தலைவா்களை சந்திப்பதற்காக எங்களுக்கே தூது அனுப்பினாா் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version