தமிழ்நாடு

நீலிக்கண்ணீர் வடிக்கும் ஓபிஎஸ்: தினகரன் ஆவேசம்!

Published

on

தான் இறக்கும் போது அதிமுக கொடியை போர்த்த வேண்டும் என சமீபத்தில் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் கூறினார். இதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் அந்த நான்கு தொகுதிகளையும் மைய்யமிட்டு தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அமமுக பொதுச்செயலாளர் தினகரன் திருப்பரங்குன்றம் தொகுதியில் இரண்டாவது நாளாக நேற்று அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய தினகரன், தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க, தமிழர்களின் வாழ்வை மலரச் செய்ய நீங்கள் வாக்களிக்க உள்ளீர்கள். முன்பு எடப்பாடி அரசுக்கு எதிராக திமுகவுடன் இணைந்துகொண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்களித்த பன்னீர்செல்வம்தான், இன்றைக்கு, தான் இறக்கும்போது அதிமுக கொடியைப் போர்த்த வேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

மோடி சொன்னதால்தான் பழனிசாமியுடன் இணைந்து துணை முதல்வர் பதவியை ஏற்றேன் என்று பன்னீர்செல்வம் கூறுகிறார். அதிமுகவுக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம் என தினகரன் அதிரடியாக கேள்வி எழுப்பினார்.

Trending

Exit mobile version