தமிழ்நாடு

மோடியிடம் மண்டியிட்டுத் தோப்புக்கரணம் போட்ட எடப்பாடி பழனிசாமி: தினகரன் விளாசல்!

Published

on

திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என அமமுக கூறியதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் தினகரனையும், அமமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இருந்தாலும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியையும், அதிமுகவையும் சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகிறார். நான்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் உள்ள டிடிவி தினகரன் முன்பைவிட மிக காட்டமாக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வருகிறார்.

இதனால் அதிமுக தரப்பும் அமமுகவிற்கும், தினகரனுக்கும் உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் சூலூர் பகுதியில் அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.

மதுரையில் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சிப் பெருந்தகை என்று பட்டம் சூட்டியுள்ளனர். இதைக் கேட்டால் புரட்சித் தலைவர் எம்ஜிஆரும் புரட்சித் தலைவி அம்மாவும் எங்களுக்கு புரட்சி என்ற பட்டமே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். புரட்சிப் பெருந்தொகை என்று அவருக்குப் பட்டம் சூட்டியிருந்தால் சரியாக இருந்திருக்கும். புரட்சி என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட வேண்டும்? மோடியிடம் மண்டியிட்டுத் தோப்புக்கரணம் போடுபவர் எல்லாம் புரட்சிப் பெருந்தகையா? என கேள்வி எழுப்பினார் தினகரன்.

Trending

Exit mobile version