தமிழ்நாடு

அதிமுகவின் பொதுச்செயலாளர் மோடி: தினகரன் விளாசல்!

Published

on

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் அதிமுகவை பாஜகவும், மோடியும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பொதுவாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மேலும் தற்போது பாஜகவுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது கூட கட்டாயத்தின் பேரில் வைக்கப்பட்ட கூட்டணி என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில் மோடியை அதிமுகவின் பொதுச்செயலாளர் என விமர்சித்துள்ளார் டிடிவி தினகரன்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை நாங்கள் கேட்கவில்லை. ஆனால் போர்ஜரி செய்துள்ளனர் என்பதே எங்களின் வாதம். ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, திமுக டெபாசிட் இழக்க செய்தோம். எங்கள் கட்சியில் இருந்து மற்ற கட்சிகளுக்கு சென்றவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

மக்களும், தொண்டர்களும் எங்களுடன் இருக்கிறார்கள். திமுக ஒரு பயில்வான்கூட்டணி. பாமக மானங்கெட்ட கூட்டணி. அதிமுகவின் பொதுச்செயலாளாராக மோடியை மாற்றி விட்டனர். ஓபிஎஸ் விரைவில் பாஜகவுக்கு சென்று விடுவார். வரவுள்ள தேர்தலில் 40 தொகுதியில் போட்டியிட்டு, அதில் 37 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றார் அவர்.

seithichurul

Trending

Exit mobile version