தமிழ்நாடு

தங்க தமிழ்செல்வன் என்னைப் பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்: தினகரன் அசால்ட்!

Published

on

அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கும், பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நீடித்து வரும் நிலையில் தினகரன் குறித்து தங்க தமிழ்ச்செல்வன் மரியாதைக்குறைவாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தேனி அமமுக நிர்வாகிகளை வரவழைத்து இன்று அவசர ஆலோசனை நடத்திய டிடிவி தினகரன், தங்க தமிழ்செல்வன் அந்த ஆடியோவில் கூறியது குறித்து பதிலடி கொடுத்துள்ளார். அந்த ஆடியோவில் தான் விஸ்வரூபம் எடுத்தால் தாங்க மாட்டீர்கள் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார். இதற்கு தினகரன் தற்போது பதில் அளித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த தினகரன், கட்சிக்கு எதிராக தொடர்ந்து ஊடகங்களில் பேசிவரும் தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கனவே ஏதோ முடிவெடுத்துவிட்டார். எனவே அடுத்த தேனி மாவட்டச் செயலாளர், கொள்கை பரப்புச் செயலாளராக யாரை நியமிக்கலாம் என்று ஏற்கனவே ஆலோசனை நடத்தியிருந்தோம். அதனால் தான் அவரை நீக்கவில்லை.

இனிமேல் தங்க தமிழ்ச்செல்வனிடம் விளக்கம் கேட்கத் தேவையில்லை. அவர் விஸ்வரூபம் எல்லாம் எடுக்கமாட்டார். என்னைப் பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார். அவருடைய பதவிக்கு வேறு ஆள் நியமிக்கப்பட்டாலே அவர் நீக்கப்பட்டதாகத்தானே அர்த்தம் என்றார் அசால்ட்டாக தினகரன்.

seithichurul

Trending

Exit mobile version