தமிழ்நாடு

இடையில் 10 வருடங்கள் எங்கே போனேன்? எடப்பாடி பழனிசாமிக்கு தினகரன் அதிரடி பதில்!

Published

on

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் அவரது மறைவிற்கு பின்னர் மீண்டும் அதிமுகவுக்கு சசிகலாவால் கொண்டு வரப்பட்டார். தற்போது அவர் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து அதிமுகவுக்கு எதிராக அரசியல் செய்து வருகிறார். இந்நிலையில் தினகரன் இடையில் 10 வருடங்கள் அரசியலில் ஈடுபடாமல் இருந்தது குறித்து பதில் கூறியுள்ளார்.

நான்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ள தினகரன் நேற்று எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்தார். அப்போது அவர், ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். அதிமுக பக்கம் இருப்பவர்கள் டெண்டர் பார்ட்டிகள்தாம். தேர்தல் முடிவுகள் தெரிந்து அதிமுகவில் இருப்பவர்கள் துக்கத்தில் இருப்பதுபோல இருக்கிறார்கள்.

தினகரா உன்னைத் தெரியாதா என்று தற்போது பழனிசாமி பேசுகிறார். அவர்தான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தொப்பி சின்னத்தில் எனக்குப் பிரச்சாரம் செய்தபோது, தனக்கு பின்னால் நூறாண்டுகள் இந்த இயக்கம் இருக்கும் என்று ஜெயலலிதா சட்டப்பேரவையில் கூறியுள்ளார். அதற்காக ஜெயலலிதா விட்டுப் போனவர்தான் தினகரன் என்று பேசியிருந்தார். ஆனால், தற்போது தினகரன் 10 வருடங்கள் எங்கே போனார் என்று கேட்கிறார். அவர்களைப் போன்ற துரோகிகளின் சதி காரணமாக வெளியிலிருந்தேன். கட்சியைக் காப்பாற்ற வேண்டிய கடமை வந்ததால் திரும்பவும் வந்தேன் என்றார் அதிரடியாக.

seithichurul

Trending

Exit mobile version