இந்தியா

பட்ஜெட்டை செல்போனில் நேரலையில் பார்க்கலாம்: ‘டிஜிட்டல் பார்லிமெண்ட்’ செயலி அறிமுகம்!

Published

on

ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை தொலைக்காட்சியில் நேரலையாக பார்க்கலாம் என்ற வசதி இருக்கும் நிலையில் தற்போது இந்த ஆண்டு முதல் செல்போனிலும் நேரடியாக பார்க்கலாம் என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பதும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகை அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து மாநிலத் தேர்தலை கணக்கில் கொண்டு இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதால் பல்வேறு சலுகைகளை எதிர்பார்க்கலாம் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டை தொலைக்காட்சிகளில் நேரடியாக பார்த்து வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் இந்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை மொபைலில் நேரடியாக பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக டிஜிட்டல் பார்லிமென்ட் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்த செயலி மூலம் இந்திய பட்ஜெட் தாக்கல் செய்வதை மட்டுமின்றி பாராளுமன்ற நடவடிக்கைகளையும் நேரடியாக பார்க்கலாம் என்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பொதுமக்கள் இந்த செயலியை தங்கள் மொபைலில் டவுன்லோட் செய்து பட்ஜெட்டை நேரடியாக பார்க்க தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version