இந்தியா

காணாமல் போன விளம்பரத்தின் மூலம் கடையை பிரபலமாக்கிய வியாபாரி!

Published

on

ஒரு கடையை அல்லது ஒரு பொருளை பொதுமக்களிடம் விளம்பரப்படுத்த பல்வேறு யுக்திகளை கடை நிறுவனர்கள் மட்டும் விளம்பரதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் திருமணத்திற்கு அணியும் ஷெர்வானி, குர்தா ஆடையை விளம்பரப்படுத்த அந்த ஆடையை தயாரிக்கும் நிறுவனம் காணாமல் போனவர் விளம்பரத்தின் மூலம் பிரபலமாக்கிய தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

ஹெர்வானி மற்றும் குர்தா பொருட்களை விற்பனை செய்யும் சுல்தான் என்பவரின் கடை விளம்பரத்தில் ஒரு அழகான ஆண் மகனின் புகைப்படத்தை பதிவு செய்து, அந்த புகைப்படத்தில் உள்ளவர் காணாமல் போனவர் என விளம்பரம் செய்துள்ளது.

அந்தப் புகைப்படத்திற்கு கீழே ’நல்ல அழகான ஆண்மகன், 24 வயது, இவர் காணாமல் போய்விட்டார் என்றும், இவரை பார்ப்பவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு கொண்டுவந்து விடவும் என்றும் கூறப்பட்டுள்ளது

மேலும் நீ கேட்டுக்கொண்டபடி நீ விரும்பிய பெண்ணையே உனக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்றும் அதே போல் நீ விரும்பிய திருமண ஷர்வானியை ‘சுல்தான் டகிங் ஆப் ஷர்வானி’ என்ற கடையிலேயே வாங்கி விடுகிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் அந்த கடை எங்கு உள்ளது என்ற முகவரியையும் அதன் கீழ் குறிப்பிடப்பட்டு பார்க்கிங் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளது. அதன் பின்னர்தான் இது ஷெர்வானி கடை விளம்பரம் என்பது பலருக்கு தெரிய வந்துள்ளது. இந்த புதுமையான விளம்பர உத்தி மூலம் இந்த கடை மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருவதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version