தமிழ்நாடு

டீசல் விலை மீண்டும் உயர்வு: ரூ.100ஐ தொட்டுவிடுமா?

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் இருந்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டீசல் விலை மட்டும் உயர்ந்தது என்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் டீசல் விலை மட்டும் உயர்ந்துள்ளது. இதே ரீதியில் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றால் விரைவில் பெட்ரோல் விலையையும் தாண்டி 100 ரூபாயைத் தொட்டு விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் பெட்ரோலுக்கு மட்டும் மூன்று ரூபாய் வரி குறைக்கப்பட்டது. இதனை அடுத்து பெட்ரோல் விலை 100 ரூபாயை விட குறைவாக விற்பனை ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் டீசல் குறைக்கப்படவில்லை என்பதால் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டீசல் விலை மட்டும் 20 காசுகள் உயர்ந்ததை அடுத்து இன்று மீண்டும் 23 காசுகள் உயர்ந்து சென்னையில் இன்று டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 93.69 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் சென்னையில் பெட்ரோல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ரூபாய் 98.96 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டீசல் விலை படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்வது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்பதுவும் இதே நிலையில் டீசல் விலை உயர்ந்து கொண்டு வந்தால் பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகரித்து 100 ரூபாயைத் தொட்டு விடும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version