சினிமா செய்திகள்

யோகிபாபுவின் தர்மபிரபு தப்பித்ததா? தரை தட்டியதா?

Published

on

யோகி பாபு நடிப்பில் இயக்குநர் முத்துகுமார் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் தர்மபிரபு. இந்த படம் குறித்த விமர்சனத்தை பார்ப்போமா!

காமெடியன்கள் கதாநாயகன் ஆவது என்.எஸ். கிருஷ்ண, நாகேஷ் காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது யோகிபாபுவும் கதாநாயகனாக தர்மபிரபு படம் மூலம் மாறியுள்ளார்.

எமதர்மனாக இருக்கும் தந்தை ராதாரவிக்கு வயதாகி விட்டதால், மகனுக்கு பதவி பிராமாணம் செய்ய வைக்க நினைக்கிறார். இதில், வாரிசு அரசியல் போட்டியை இயக்குநர் நையாண்டியாக கையாண்டுள்ளார்.

மேலும், யோகிபாபுவின் பதவிக்கு போட்டிப் போடும், மற்றொரு யமலோக பிரஜை செய்யும் சதி திட்டங்களில் சிக்கிய யோகிபாபு, இறுதியில் தனது பதவியை தக்க வைத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

மேலோகத்தில் இருந்து பூலோகம் வரும்போது யோகிபாபு செய்யும் அலப்பறைகள், மற்றும் காமெடி கவுண்டர்கள் பக்காவாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

லக்கி மேன் படத்தின் தற்போதைய ரீமேக் மாதிரியே படம் செல்வதால், பல இடங்களில் போர் அடித்தாலும், சமகால அரசியல், பிரச்னைகளை இயக்குநர் முத்துகுமார் கையாண்ட விதம் பாராட்டுதல் குரியது.

எமலோகம் செட், சிஜி ஒர்க்கெல்லாம் படுசுமாராக இருப்பது படத்திற்கு நாடகத் தன்மையை வரவழைத்து விடுகிறது.

இந்த படத்திற்கு இதற்கு மேல் செலவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றாலும், யோகிபாபு படத்திற்கு தயாரிப்பு தரப்பு இதற்குமேல் பட்ஜெட் செலவு செய்யுமா என்பது சந்தேகம் தான்.

அதனால், படத்தின் தரமும் குவாலிட்டியும் குறைந்துள்ளது. யோகிபாபு அடுத்து படத்தில் அதிகம் கவனிக்கப்படுவர் ரமேஷ் திலக் தான். சித்திரகுப்தனாக அவர் நடித்திருக்கும் நடிப்பு அட்டகாசம். ஜனனி அய்யர், புதுமுக நடிகர் என பலரும் படத்தில் இருந்தாலும், அனைத்திற்கும் ராஜாவாக எமராஜாவாக யோகிபாபு அசத்தியுள்ளார்.

மற்றபடி படத்தை ஒருமுறை பார்த்து சிரித்து மகிழலாம்.

மூவி ரேட்டிங்: 2/5.

seithichurul

Trending

Exit mobile version