கிரிக்கெட்

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்தாரா தல தோனி?

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பதும் தற்போது அவர் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஓய்வுக்குப் பின் அவர் விவசாயம் செய்து வருவதாகவும் தன்னுடைய நிலத்தில் விளைந்த பொருட்களை ஏற்றுமதி செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

ஓய்வுக்குப் பின்னர் ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் சம்பந்தமான பணிகளில் இல்லாமல் இருந்தது அனைவரையும் ஆச்சரியமடைந்த செய்தது.

இந்த நிலையில் தல தோனி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்ததாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர்என்ற பகுதியில் ஆசிரியர் பணிக்கு எம்எஸ் தோனி பெயரில் விண்ணப்பம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் தோனியின் தந்தை பெயர் சச்சின் டெண்டுல்கர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் அந்த விண்ணப்பம் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் அது குறித்து விசாரணை செய்தபோது மர்ம நபர் ஒருவர் போலியாக விண்ணப்பித்தது என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அந்த மர்ம நபரை நேர்காணலுக்கு அழைப்பு விடுத்தும் பதில் வராததால் விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்து உள்ளனர்.

தல தோனியின் பெயரில் ஆசிரியர் பணிக்கு மர்ம நபர் ஒருவர் விண்ணப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version