சினிமா
AK 62 படத்தின் ப்ரோமோ ஷூட்டிற்காக சென்னை திரும்பினாரா அஜித்? தீயாய் பரவும் புகைப்படங்கள்!
![ajith chennai - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/ajith-chennai.jpg)
ஏகே 62 படத்தின் இயக்குநர் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருந்த கேப்பை பயன்படுத்திக் கொண்டு வெளிநாட்டுக்கு நடிகர் அஜித் ஜாலி டூர் சென்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் சென்னைக்கு திரும்பி உள்ளதாக லேட்டஸ்ட் போட்டோக்கள் வெளியான நிலையில், அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சந்தோஷப்பட்டு வருகின்றனர்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள அஜித்தின் ஏகே 62 படத்தின் இயக்குநர் யார் என்பதே பெரிய கேள்விக்குறி ஆகி உள்ளது.
![ajith kumarr - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/ajith-kumarr.jpg)
#image_title
துணிவு படம் வெளியாகும் முன்னதாகவே விக்னேஷ் சிவன் தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என அறிவிக்கப்பட்டது. அஜித் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் பதிவிட்டு ஆனந்தமானார்.
பேட்டிகளில் நான் தான் சார் அஜித் படத்தை இயக்கப் போறேன் என தொகுப்பாளர் டவுட்டா கேட்ட போது கூட விக்னேஷ் சிவன் விளக்கி இருந்தார். ஆனால், இப்படி அவரை அஜித் விரட்டிவிடுவார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
![ak 62 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/ak-62.jpg)
#image_title
தடம், மீகாமன், கலகத் தலைவன் படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி தான் அஜித்தின் 62வது படத்தை இயக்கப் போவதாக கூறுகின்றனர்.
ஏகே 62 படத்தின் டைட்டில் ப்ரோமோ மற்றும் இயக்குநர் யார் என்கிற அறிவிப்பு வீடியோவை அஜித் சுற்றுலா முடிந்து வந்தால் தான் இயக்க முடியும் என இருந்த நிலையில், தற்போது அஜித் சென்னை திரும்பிய புகைப்படங்கள் வெளியானதும் அதற்காகத்தான் அஜித் அவசர அவசரமாக சென்னை திரும்பி இருக்கிறார் என கூறுகின்றனர். கூடிய விரைவிலேயே அஜித்தின் ஏகே 62 படத்தின் இயக்குநர் யார் என்கிற அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.