சினிமா செய்திகள்

AK 62 தான் கடைசி படமா? அதிரடி முடிவை எடுத்து விட்டாரா அஜித்?

Published

on

எந்தவொரு போட்டியும் தேவையில்லை என ஏகே 62 படத்திற்கு பிறகு நடிகர் அஜித் சினிமாவுக்கு ஒட்டுமொத்தமாக முழுக்குப் போட்டு ஓய்வெடுக்கப் போகிறார் என கோடம்பாக்கத்தில் பரபரப்பு பேச்சுக்கள் எழுந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

நடிகர் அஜித் உலகம் முழுவதும் சுற்றுலா செய்யும் தனது ஆசையை நிறைவேற்ற துடியாய் துடித்து வருகிறார்.

#image_title

சினிமா மீது அதிக ஆர்வம் செலுத்தாமல், உலகம் முழுவதும் சுற்றுலா செய்யவே கனவு கண்டு வரும் நடிகர் அஜித் அடிக்கடி கிடைக்கிற கேப்பில் எல்லாம் வெளிநாடுகளுக்கு பைக் டூர் சென்று வருகிறார்.

பரந்து விரிந்த உலகை முழுவதுமாக கண்டு ரசித்திட வேண்டும் என்கிற ஆவல் நடிகர் அஜித் குமாரின் அடி மனதில் எழுந்துள்ள நிலையில், அதற்கான தேடலிலேயே அதிக நாட்டம் கொண்டு இருக்கிறார் எனக் கூறுகின்றனர்.

#image_title

ஏகே 62 படத்திற்கு பிறகு நடிகர் அஜித் குமார் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலக போவதாகவும் ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், இது எந்தளவுக்கு உண்மை என்பது பெரிய கேள்வியாகவே உள்ளது. அஜித்தின் ஏகே 62 படத்தை மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் படமாக மாற்ற இப்படியொரு வதந்தி கிளப்பட்டு இருக்கலாம் என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version