சினிமா செய்திகள்
துருவ் விக்ரமின் ‘வர்மா’ திரைப்படம் எப்போது திரைக்கு வரும்?
தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியைக் கொண்டாடிய படம் அர்ஜூன் ரெட்டி. இந்தத் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மாவில் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார். பாலா இயக்கி வருகிறார்.
நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருக்கும் இந்தத் திரைப்படம் 2019 பிப்ரவரி மாதம் காதலர் தினத்திற்கு ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகப் படக்குழுவிடமிருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
துருவ் ஜோடியாக மேகா அறிமுகமாகிறார். இ4 எண்டெர்டெயின்மண்ட் தயாரிக்கிறது. அர்ஜூன் ரெட்டி திரைப்படத்திற்குத் தெலுங்குவில் இசை அமைத்த ராதானே இணைந்துள்ளார்.