கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் செல்லுமா? தோனி சொல்வது என்ன?

Published

on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் பிளே ஆப் செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 11 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது, லக்னோ மற்றும் குஜராத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்ட நிலையில் மீதமுள்ள இரண்டு அணிகள் எது என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது .

ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் 14 புள்ளிகள் பெற்று மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ள நிலையில் இந்த இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று விட்டால் கண்டிப்பாக பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடும். அதன் பிறகு சென்னை அணிக்கு வாய்ப்பு இல்லை .

ஆனால் அதே நேரத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் அடுத்து வரும் அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் சென்னை அணிக்கு ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியிடம் கேட்டபோது பாடம் பிளே ஆப் வாய்ப்பு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. என்னைப் பொருத்தவரை அன்றைய ஆட்டத்தில் திட்டமிட்டு நன்றாக விளையாட வேண்டும். நல்ல ரன் ரேட்டில் ஜெயிக்க வேண்டும் என்பது மட்டுமே எண்ணம்.

ஐபிஎல் போட்டியை நாம் ரசிக்க வேண்டுமே தவிர அதில் கணக்குப் பார்க்கக் கூடாது. மீதமுள்ள மூன்று போட்டிகளில் எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை முழுமையாக விளையாடுவோம். அதன் பிறகு பிளே ஆப் தகுதி பெறுவது, தகுதி பெறாதது என்பதை பார்த்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version