கிரிக்கெட்

தல தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு? விராட் கோலி பதில்!

Published

on

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த வீரர்கள் வரிசையில் மகேந்திர சிங் தோனிக்கு நிச்சயம் முக்கிய இடமுண்டு. இவர் இந்திய அணிக்கு ஆற்றிய பங்களிப்பு அசாத்தியமானது. இந்நிலையில் 38 வயதான தோனியின் ஓய்வு குறித்து சமீப காலமாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெளியேறியபோதே தோனியின் ஓய்வு குறித்த பேச்சு ஆரம்பித்தது. இந்நிலையில் நேற்று நடந்து முடிந்த உலகக் கோப்பை அரையிறுதியிலும் சிறப்பாக விளையாடினார் தோனி. மிக மோசமாக தோற்க வேண்டிய இந்திய அணியை வெற்றியின் விளிம்புக்கு கொண்டு வந்து கௌரவமாக தோற்றதற்கு தோனி முக்கிய காரணம்.

அனைத்து வகையான உலகக் கோப்பையையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் தோனி தான். இந்த உலகக் கோப்பை போட்டிதான் தோனிக்கு கடைசி உலகக் கோப்பை போட்டியாகும். இந்நிலையில் தற்போது உலகக் கோப்பை போட்டியில் இந்து இந்தியா வெளியேறியுள்ள நிலையில் தோனியின் ஓய்வு குறித்த பேச்சு மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து அணியுடனான தோல்வி குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தோனியின் ஓய்வு குறித்தும் பேசினார். தோனியும், ஜடேஜாவும் சிறப்பாக விளையாடினார்கள். போட்டி மீண்டும் எங்கள் கைக்கு வந்ததாகவே உணர்ந்தோம். சில தவறான ஷாட்களை நாங்கள் தேர்வு செய்துவிட்டோம். நாங்களும் தரமான பங்களிப்பை கொடுத்துள்ளோம். மேலும் டோனி தன்னுடைய ஓய்வு குறித்து எங்களிடம் எதுவும் கூறவில்லை என தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version