தமிழ்நாடு

சென்னை பீச்சில் நம்ம தல தோனி.. செம மாஸ் வீடியோ!

Published

on

சென்னை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சென்னையில் விடுமுறையை கழிக்கும் வீடியோ ஒன்று பெரிய வைரலாகி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி ஜார்கண்ட மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும், தமிழகத்தின் செல்லப்பிள்ளை. பிற மாநில மக்களை விட தோனியை அதிகம் கொண்டாடுவது தமிழர்கள்தான்.

அதேபோல் தோனிக்கு தமிழர்கள், தமிழ்நாடு என்றால் அத்தனை பிரியம். தன்னுடைய மகள் ஸிவாவிற்கும் இவர்கள் சில தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இவர் விடுமுறை என்றால் கொடைக்கானல், சென்னை என்று தமிழகத்தில் பல இடங்களில் சுற்றுவதும் வழக்கம். இந்த நிலையில் தோனி தனது குடும்பத்துடன் சென்னையில் கடற்கரையில் கொண்டாடும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

பிசிசிஐ அமைப்பின் முன்னாள் தலைவர் சீனிவாசன் கடந்த 28ம் தேதி சென்னையில் ”காபி டேபிள் புக்” என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த விழாவில் கலந்து கொள்ளத்தான் தோனி சென்னை வந்திருந்தார். தமிழக முதல்வர் பழனிச்சாமியும் இந்த விழாவில் கலந்து கொண்டார்

இது சென்னையின் எந்த கடற்கரை என்ற விவரம் வெளியாகவில்லை. இதில் தோனி தனது மகள் ஸிவா மற்றும் ஷாக்ஷியுடன் இருக்கிறார்கள். இந்த வீடியோ இணையம் முழுக்க பெரிய ஹிட் அடித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version