கிரிக்கெட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தோனிக்கு இடமில்லை: ஓரங்கட்டப்படுகிறாரா?

Published

on

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தோனியின் பெயர் இடம்பெறாததால் அவர் ஓரங்கட்டப்படுகிறாரோ என்ற பேச்சு கிரிக்கெட் வட்டாரத்திலும் அவரது ரசிகர் வட்டாரத்திலும் பேசப்படுகிறது.

நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறியது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி ஓய்வு பெறப்போவதாகவும், அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்ற பேச்சும் அதிகமாக உலா வந்தது அப்போது. தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற பேச்சுக்கள் வந்தாலும், அவர் இதுகுறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் தோனிக்குப் பதிலாக ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தோனி ஓய்வில் காஷ்மீருக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இருந்தாலும் அப்போதே தோனி ஓரங்கட்டப்படுகிறாரா என்ற பேச்சு நிலவி வந்தது.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலில் தோனி இடம் பெறாதது மேலும் இந்த சர்ச்சையை வலுவாக்கியுள்ளது. இந்த தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், ஷிகர் தவண், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, க்ரூனல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அகமது, நவ்தீப் சைனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version