கிரிக்கெட்

தோனி இந்தியாவின் ஹீரோ: ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவில் புகழாரம்!

Published

on

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி இருபது ஓவர் தொடரை சமன் செய்துவிட்டு தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிவாகை சூடியது.

இந்த டெஸ்டில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 11 கேட்சுகளை பிடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்த 11 கேட்சுகளை பிடித்து ரிஷப் பந்த், இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜேக் ரஷல், தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் ஏபி டீவில்லியர்ஸ் ஆகியோரின் உலக சாதனையைச் சமன் செய்துள்ளார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரிஷப் பந்த், எனக்கு விக்கெட் கீப்பிங்கில் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொடுத்தவர் தோனிதான். பல்வேறு விக்கெட் கீப்பர்கள் அணியில் உருவாகவும் தோனிதான் காரணம். தோனி இந்திய நாட்டின் ஹீரோ. தோனியிடம் இருந்து கிரிக்கெட் வீரராக, தனி மனிதராக நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

எப்போழுதெல்லாம் தோனி என்னுடன் இருக்கிறாரோ அப்போது மிகவும் நம்பிக்கை உடையவனாக நான் உணர்வேன். மேலும் அடிலெய்ட் டெஸ்டில் இப்படி ஒரு சாதனையை நான் நிகழ்த்துவேன் என்று நினைக்கவில்லை. ஆனால், சில நல்ல கேட்சுகளைப் பிடித்திருக்கிறேன் என்றார் அவர்.

Trending

Exit mobile version