கிரிக்கெட்

7வது இறங்கினால் ஒண்ணும் கிழிக்க முடியாது- தோனிக்கு கம்பீர் அட்வைஸ்!

Published

on

ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டன், 7வது இடத்தில் இறங்கினால் அவரால் எதையும் சாதிக்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

14வது ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் சிஎஸ்கே அணி முதல் ஆட்டத்தில் மோதியது. இதில் சிஎஸ்கே அணியில் 7வது வீரராகக் களமிறங்கிய அணியின் கேப்டன் தோனி, ஆவேஷ் கான் பந்துவீச்சில் டக்அவுட்டில் வெளியேறினார். இந்நிலையில்,  இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சில அறிவுரைகளை தோனிக்கு வழங்கியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்சியில் கவுதம் கம்பீர் பேசியதாவது, சிஎஸ்கே கேப்டன் தோனி, 7வது இடத்தில் களமிறங்கி பேட் செய்தால் அணியை வழிநடத்துவது கடினம், வழிநடத்தவும் முடியாது. தோனி இன்னும் உயர்ந்த வரிசையில் அதாவது 4வது மற்றும் 5வது வரிசைக்குள்ளாகவே களமிறங்க வேண்டும்.

ஏனென்றால் ஒரு கேப்டனாக இருப்பவர், அணியை முன்நின்று வழிநடத்திச் செல்ல வேண்டும். இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கேப்டனாக இருக்கும் வீரர் உயர்ந்த வரிசையில் களமிறங்க வேண்டும் என்பதை பலமுறை கூறியுள்ளேன். தோனி 7-வது வரிசையில் பேட்டிங் செய்யும்போது, அனைத்து பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழந்திருப்பார்கள், பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருக்கும்போது எவ்வாறு வழிநடத்த முடியும்.

இப்போது இருக்கும் தோனி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இருந்த தோனி கிடையாது. தோனியால் பந்தை சரியாகக் கணித்து ஆட முடியவில்லை. முதலி்ல் தோனி தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, பந்துவீச்சாளர்களைக் கணித்தபின் விளையாட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version