வீடியோ

என்னடா பேய் ஆய் கழுவுது – தில்லுக்கு துட்டு 2 டீஸர் ரிலீஸ்!

Published

on

சக்கப்போடு போடு ராஜா படம் கடந்த ஆண்டு வெளியாகி சந்தானத்துக்கு படு தோல்வியை கொடுத்தது. மேலும், அவர் நடிப்பில் உருவாகி வெகு நாட்களாக ரிலீசாகாமல் காத்திருக்கும் சர்வர் சுந்தரம் படமும் சந்தானத்துக்கும் ஏமாற்றத்தையே கொடுத்து வருகிறது.

இந்நிலையில், தனக்கு வெற்றியை கொடுத்த தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்தை சந்தானம் எடுத்துள்ளார்.

ஏற்கனவே அந்த படத்தின் முதல் டீஸர் வெளியாகி வைரலான நிலையில், மீண்டும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப எண்ணிய சந்தானம் இரண்டாவது டீஸரை தற்போது ரிலீஸ் செய்துள்ளார்.

டீஸர் ஆரம்பத்திலேயே பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் வசனங்களை படத்திற்கு ஏற்றவாறு புது பஞ்ச்களுடன் சந்தானம் பேசி கலகலக்க வைக்கிறார். டீஸரின் இறுதியில், மொட்ட ராஜேந்திரன் பேய் கையை பிடித்து கழுவுவதை அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்களா அல்லது முகம் சுழிப்பார்களா என்பது படம் வெளியானதும் தெரிந்துவிடும்.

Trending

Exit mobile version