சினிமா செய்திகள்
சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் டீசர்ர் இன்று வெளியீடு..!
சந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு திரைப்படம் 2016-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை அடுத்து தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் 2-ம் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் தில்லுக்கு துட்டு 2 படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது.
Teaser from Today #DhillukuDhuddu2 ? pic.twitter.com/ejcE1Ce0Ar
— Santhanam (@iamsanthanam) October 29, 2018
நகைச்சுவை நடிகரான சந்தானம் ஹீரோவான பிறகு அன்மையில் வெளியான சில படங்கள் வெற்றிபெறாத நிலையில் தில்லுக்கு துட்டு 2-ம் பாகத்தினை மிகப் பெரிய அளவில் எதிர்பார்த்து வருகிறார்.
மேலும் இவரது நடிப்பில் தயாராகி நீண்ட காலம் வெளியாகாமல் உள்ள சர்வர் சுந்தரம் படம் எப்போது வெளியாகும் என்று சந்தானத்தின் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.