சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு வைல்ட்கார்ட்: வீடே களைகட்ட போகுது?

Published

on

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் ஆரம்பத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில் அதன் பின்னர் சதீஷ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய இருவர் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்தனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வரை பிக்பாஸ் வீட்டில் இருந்து 6 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பதும் இரண்டு போட்டியாளர்கள் வாக்-அவுட் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதாஇயடுத்து பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் தற்போது அபிராமி, பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், ஜூலி, நிரூப், சதீஷ், ஸ்ருதி மற்றும் தாமரை ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் திடீரென இன்று மீண்டும் ஒரு வைல்ட்கார்ட் போட்டியாளர் உள்ளே நுழைந்துள்ளார். அவர்தான் பிரபல நகைச்சுவையாளர் தீனா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உள்ளே வந்ததால் பிக்பாஸ் வீடு களைகட்ட போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending

Exit mobile version