இந்தியா

பேருந்து டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு!

Published

on

திருப்பதி செல்வதற்கு பேருந்து டிக்கெட் எடுக்கும் போதே தரிசனை டிக்கெட்டையும் எடுத்துக் கொள்ளலாம் என்ற புதிய வசதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய முடியாமல் இருந்த பக்தர்கள் கடந்த சில வாரங்களாக தரிசனம் செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய இலவச டிக்கெட்டுகள் மற்றும் ரூபாய் 300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது என்பதும் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து ஆன்லைனில் முன்பதிவு செய்து திருப்பதி சென்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஆந்திர அரசு பேருந்துகளில் பல்வேறு நகரங்களில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு பேருந்து டிக்கெட்டுடன் ரூபாய் 300 தரிசன டிக்கெட் வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்த திட்டம் கொரோனா காலத்திற்கு முன்பு அமலில் இருந்த நிலையில் இடையில் சிலமாதங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த சேவை தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர அரசு பேருந்துகளில் ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, பெங்களூரு, சென்னை, வேலூர் ஆகிய நகரங்களில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ரூபாய் 300 தரிசன டிக்கெட்டை பேருந்து டிக்கெட்டையும் இணைத்து வழங்க திருமலை-திருப்பதி ஏற்பாடு செய்துள்ளது. மேலும் சில நகரங்களில் இருந்தும் தரிசன டிக்கெட் பேருந்துகளில் அளிக்கவும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version