சினிமா
நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி தப்பா பேசுறீங்க; தர்ஷா குப்தா செல்லத்தை இப்படி அழ விட்டுட்டாங்களே!
நடிகர் சதீஷுக்கு ஜோடியாக சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்துள்ளார் தர்ஷா குப்தா. செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் எடக்கு மடக்கான கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், நான் என்ன தப்புப் பண்ணிட்டேன்னு இப்படி கேள்வி கேட்குறீங்க என கேவி கேவி அழுதே விட்டார்.
குக் வித் கோமாளி பிரபலமான டிவி நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் எல்லை மீறிய கவர்ச்சி போட்டோக்களை போட்டு ரசிகர்களை மூடேற்றி லைக்குகளை குவித்து வருகிறார்.
ஏற்கனவே மோசடி ப்ராடக்ட்ஸ்களை தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் விற்கிறார் என்கிற சர்ச்சை கிளம்பி அவரை பெரியளவில் காயப்படுத்தியது. இந்நிலையில், சதீஷ் தர்ஷா குப்தா அணிந்திருந்த ஆடை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
சன்னி லியோனே சேலை கட்டி வந்திருக்காங்க, கோவை பொண்ணு நீ என்ன டிரெஸ் போட்டுட்டு வந்திருக்க என சதீஷ் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியது. உடனடியாக சதீஷுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தர்ஷா குப்தா போட்ட ட்வீட்டும் அந்த பிரச்சனையை பெரிதாக்கியது.
இந்நிலையில், ஓ மை கோஸ்ட் படத்தின் ப்ரமோஷனுக்காக பத்திரிகையாளர்களை சந்தித்த தர்ஷா குப்தாவிடம் கிறிஸ்துமஸ்க்கு ஏன் அரைகுறை ஆடையில் போட்டோஷூட் நடத்துனீங்க என்றும் சதிஷ் உடனான சண்டை என்ன ஆனது என்றும் கேள்விகள் கேட்கப்பட்டன.
கிறிஸ்துமஸ் தீம் போட்டோஷூட்டில் எனக்கு எந்தவொரு கவர்ச்சியும் தெரியவில்லை என காட்டுறதையும் காட்டிவிட்டு கூலாக பதில் அளித்த தர்ஷா குப்தா சதீஷ் அந்த பிரச்சனைக்கு பிறகு போனில் பேசினார் இப்போ எந்த பிரச்சனையும் இல்லை என பேசினார்.
தொடர்ந்து தர்ஷா குப்தாவை கார்னர் செய்யும் விதமாக கேள்விகள் குவிந்த நிலையில், நான் என்ன தப்பு பண்ணினேன்.. என்னை என் டார்கெட் பண்றீங்க, நான் எல்லாரையும் ரொம்ப மதிக்கிறவ, திமிரானவ எல்லாம் கிடையாது என ஓ என அழுதே விட்டார். தர்ஷா குப்தாவின் அழுகையை பார்த்த அவரது ஆர்மியினர் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.