விமர்சனம்

வாத்தி விமர்சனம்: மற்ற இரண்டு தெலுங்கு இயக்குநர்களை மிஞ்சிட்டாரா வெங்கி அட்லூரி? தனுஷ் படம் எப்படி?

Published

on

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை இயக்குநர் அனுதீப் இயக்குகிறேன் என்கிற பெயரில் அம்மிக் கல்லை கொத்தத் தெரியாதவன் போல கொத்தி பிரின்ஸ் படத்தை பஞ்சர் ஆக்கி விட்டார்.

டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, காமெடி வேண்டுமா காமெடி இருக்கு, சென்டிமென்ட் வேணுமா சென்டிமென்ட் இருக்கு என பேக்கேஜ் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் வம்சி என தில் ராஜு வாரிசு படத்தை ப்ரமோட் செய்தும் ரசிகர்கள் அந்த படத்தை மெகா சீரியல் என கழுவி ஊற்றி விட்டனர்.

#image_title

இந்நிலையில், இன்னொரு தெலுங்கு இயக்குநர் படமா? நம்பிப் போகலாமா என தயங்கிய ரசிகர்களுக்கு தனுஷின் நடிப்பு வாத்தி படத்தை ஒரு முறை தாராளமாக பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. வாங்க முழு விமர்சனத்திற்குள் போகலாம்.

1990களில் ஆந்திராவு பார்டர் அருகே தமிழ்நாட்டு எல்லையில் நடக்கும் ஒரு கதையாக இந்த வாத்தி படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார்.

தனியார் பள்ளியை நடத்தி வரும் சமுத்திரகனி அரசு பள்ளிகளை முடக்க சதித்திட்டம் செய்து பலனற்று போகும் நிலையில், அரசு பள்ளிகளை தத்தெடுத்து இலவசமாக கல்வி கொடுக்கிறேன் என்கிற பெயரில் மொக்கையான ஆசிரியர்களை ஒவ்வொரு ஊருக்கும் அனுப்பி அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கெடுக்க பார்க்கும் வில்லனாக வருகிறார்.

#image_title

அப்படி மொக்கை ஆசிரியர் என அனுப்பி வைக்கப்படும் தனுஷ் தான் செல்லும் ஒரு ஊரில் உள்ள அரசு பள்ளியை தத்தெடுத்து அங்குள்ள மாணவர்களை எப்படி படிக்க வைத்து அசத்துகிறார் என்றும் சமுத்திரகனியின் சதி திட்டத்திற்கு எதிர்ப்பாக மாறுகிறார் என்பதும் தான் வாத்தி படத்தின் கதை.

இந்த படத்தில் கமர்ஷியல் கலந்து, போர் அடித்து விடாமல் ஹீரோயிசம், ரொமான்ஸ், காமெடி என அனைத்தையும் வைத்து இயக்குநர் வெங்கி அட்லூரி மேட்ச் பண்ணி உள்ளார்.

காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் வராமல் உன்னி கிருஷ்ணன் குரலா வரும் என்பது போல தெலுங்கு இயக்குநரின் படத்தில் ஓவர் தெலுங்கு வாடை அடிப்பதை தவிர்க்க முடியவில்லை என்றாலும், தனுஷ் ரசிகர்களை மட்டுமின்றி படத்தை பார்க்க சென்ற ஜெனரல் ஆடியன்ஸையும் படம் கவர்கிறது.

கருத்துக்கு கருத்து இருக்கு, கமர்ஷியலுக்கு கமர்ஷியல் இருக்கு, சம்யுக்தா மேனன் அழகுக்கும் ஜிவி பிரகாஷ் இசைக்குமே இந்த படத்தை ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்!

வாத்தி – ஒரு முறை!
ரேட்டிங் – 3.5/5.

Trending

Exit mobile version