சினிமா செய்திகள்
வடசென்னையில் விட்டதை அசுரனில் பிடித்த தனுஷ்!
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வடசென்னை படத்தில் இயக்குநர் அமீர் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதியை தான் முதலில் வெற்றிமாறன் அணுகியிருந்தார். சில நாள் ஷூட்டிங்கும் முடிந்த நிலையில், விஜய்சேதுபதி படத்தில் இருந்து சில பல காரணங்களுக்காக வெளியேறினார்.
இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தில் விஜய் சேதுபதி ஒரு சிறப்பான தோற்றத்தில் நடித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அசுரன் படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது என சமீபத்தில் ரத்தம் தெறிக்க தெறிக்க உள்ள ஒரு போஸ்டரும் தனுஷ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தது வைரலாகி வரும் நிலையில், தனுஷுடன் விஜய்சேதுபதி நடித்திருக்கும் தகவல் கூடுதல் பலத்தை அசுரன் படக்குழுவினருக்கு கொடுத்துள்ளது.
அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். வில்லனாக இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடிக்கிறார். மேலும், படத்தில் பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பிரபலங்களும் நடிக்கின்றனர்.