சினிமா செய்திகள்

‘ஜெகமே தந்திரம்’ தியேட்டரில் ரிலீசாக விரும்புகிறேன்- தனுஷ் ட்வீட்டால் தயாரிப்பாளர் கலக்கம்

Published

on

‘ஜெகமே தந்திரம் திரைப்படம் திரை அரங்கங்களில் வெளியாவதை நானும் விரும்புகிறேன்’ என நடிகர் தனுஷ் ட்வீட் செய்ய தயாரிப்பாளர் தரப்பு கலக்கம் அடைந்துள்ளது.

நடிகர் தனுஷின் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் திரை அரங்கங்களில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதே போல் ஜெகமே தந்திரம் ரிலீஸ் அப்டேட் குறித்தும் தனுஷ் ரசிகர்கள் தொடர்ந்து ட்விட்டரில் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் தனுஷின் ஜெகமே தந்திரம் படம் ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என செய்திகள் வரத் தொடங்கின.

இதனால் நேற்ற்லிருந்து தனுஷ் ரசிகர்கள் பலரும் ஜெகமே தந்திரம் திரை அரங்கங்களில் ரிலீஸ் ஆக வேண்டும் எனக் கோரிக்கை வைக்கத் தொடங்கினர். ரசிகர்களின் வேண்டுகோளே தனது வேண்டுகோளும் என்பது போல் நடிகர் தனுஷ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “தியேட்டர் ஓனர்கள், விநியோகஸ்தர்கள், வெளியீட்டாளர்கள், சினிமா காதலர்கள் மற்றும் எனது ரசிகர்களைப் போலவே ஜெகமே தந்திரம் திரைப்படம் தியேட்டரில் வெளியாக வேண்டும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version