சினிமா செய்திகள்

‘இந்த முறையாவது அண்ணனை இம்ப்ரஸ் பண்ணனும்’- கலக்கல் கூட்டணியுடன் தனுஷ்!

Published

on

நடிகர் தனுஷ் தனது அடுத்த படத்திலாவது தனது அண்ணன் மற்றும் இயக்குநர் செல்வராகவனைக் கவரும் வகையில் நடிக்க வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் மீண்டும் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தக் கூட்டணியுடன் இசை அமைக்க யுவன் சங்கர் ராஜாவும் இணைந்துள்ளார். ஆக, இது நிச்சயமாக புதுப்பேட்டை 2-ம் பாகத்துக்கான கூட்டணிதான் என தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அண்ணன் இயக்கத்தில் புதிய படப்பிடிப்பைத் தொடங்க உள்ள தனுஷ், “செல்வராகவன்+யுவன்+ அரவிந்த் கிருஷ்ணா… ஆரம்பத்தி அதே இடத்தில். என்னை உருவாக்கியவர், செதுக்கியவர் மற்றும் நான் இந்த உயரத்தில் இருக்கும் ஒரே காரணமான என் அண்ணன் செல்வராகவன் உடன் மீண்டும் இணைகிறேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த முறையாவது அண்ணனை இம்ப்ரஸ் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version