சினிமா செய்திகள்
ஹரிஷ் கல்யாண்-க்குப் பதில் நடிகர் தனுஷ்..?- ‘ஸ்டார்’ பட அப்டேட்
![harish kalyan- dhanush - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/harish-kalyan-dhanush.jpg)
நடிகர் ஹரிஷ் கல்யாணுக்குப் பதிலாக ‘ஸ்டார்’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இயக்குநர் எலன் இயக்கத்தில் ‘ஸ்டார்’ என்னும் திரைப்படத்தின் அப்டேட்கள் வெளியாகி இருந்தன. ஹரிஷ் கல்யாண் ‘தளபதி’ பட ரஜினிகாந்த் வேடத்தில், ‘சிகப்பு ரோஜாக்கள்’ கமல் வேடத்தில், ‘ஸ்வதேஸ்’ பட ஷாருக்கான் வேடத்தில் என அடுத்தடுத்து ஸ்டார் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வைரல் ஆகின.
ஆனால், தற்போது ஸ்டார் படத் தயாரிப்பாளர் நிதி நெருக்கடி காரணமாக படத்தில் இருந்து விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. புதிதாக படத்தைக் கையில் எடுக்க முன் வந்த மற்றொரு தயாரிப்பாளர் பெரிய ஹீரோ என்றால் மட்டுமே படம் தயாரிக்கத் தயார் எனக் கூறியுள்ளார். இதனால், ஹரிஷ் கல்யாணுக்குப் பதிலாக நடிகர் தனுஷ் ‘ஸ்டார்’ படத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா உள்ளார்.