சினிமா செய்திகள்

தயாரானது செல்வராகவன்- தனுஷ் கூட்டணி..!- விரைவில் அறிவிப்பு

Published

on

இயக்குநர் செல்வராகவனின்ன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் ‘டி’-க்காக உருவாகும் திரைப்படத்துக்காக என்பது போன்றதொரு ட்விட்டர் பதிவை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டிருந்தார். அப்போது இருந்தே மீண்டும் தனுஷ் – செல்வராகவன் கூட்டணி இணைகிறதா என்ற கேள்வி இருந்தது. தற்போது இயக்கப் பணிகள் தொடங்கப்பட்டது போன்றதொரு பதிவையும் செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.

இது தனுஷ் படத்துக்கான அறிகுறிதான் என்பது போல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து அத்ரங்கி ரே, ஜெகமே தந்திரம், கர்ணன், தனுஷ் 43 ஆகிய படங்கள் வெளியீட்டுப் பட்டியலில் உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version