சினிமா செய்திகள்

இதுக்கு பதில் சொல்லிட்டு விவாகரத்து செய்யுங்க: தனுஷ் மகன் கேட்ட அதிர்ச்சி கேள்வி!

Published

on

என் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு விவாகரத்து செய்து கொள்ளுங்கள் என தனுஷ் மகன் கேட்ட ஒரே ஒரு கேள்வி, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் பிரபல நடிகர் தனுஷ் ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டு 18 ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்த நிலையில் திடீரென இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

15 வயதில் யாத்ரா என்ற மகனும் 11 வயதில் லிங்கா என்ற மகனும் இருக்கும் நிலையில் அவர்களுடைய எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் திடீரென இருவரும் பிரிய முடிவு எடுத்தது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தனுஷின் 15 வயதான யாத்ராவிடம், ‘ நீங்கள் அப்பாவிடம் இருக்கப் போகிறீர்களா? அல்லது அம்மாவிடம் இருக்கப் போகிறீர்களா? என்ற கேள்விக்கு, ‘என்னுடைய அப்பா தனுஷ் மற்றும் அம்மா ஐஸ்வர்யா ஆகிய இருவரும் அப்பா அம்மா யாராவது ஒருவருடன் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று கூறினால் அவர்கள் என்ன பதில் அளிப்பார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு அவர்கள் தாராளமாக விவாகரத்து செய்து கொள்ளட்டும் என்று கூறியதாக செய்திகள் கசிந்து வருகிறது. தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் யாத்ராவின் இந்த கேள்வியை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version