சினிமா செய்திகள்

‘டாடா பாய் பாய்…’ ஜிவி பிரகாஷ்-க்காக தனுஷ் குரலில் வைரல் பாடல்..!

Published

on

ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்காக நடிகர் தனுஷ் ‘டாடா பாய் பாய்…’ என்னும் பாடலை பாடியுள்ளார்.

இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைக்கும் பணிகளில் பிஸியாக இருக்கிறார். இருந்தாலும் அதைவிட அளவுக்கு அதிகமான படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் ஜிவி. தற்போது ஜிவி பிரகாஷ் இயக்குநர் ராஜேஷ் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் ராஜேஷ்- ஹீரோ ஜிவி பிரகாஷ் கூட்டணியில் ஏற்கெனவே கடவுள் இருக்கான் குமாரு என்னும் படம் வெளியாகி உள்ளது. இரண்டாம் முறையாக மீண்டும் கூட்டணி அமைத்துள்ள ராஜேஷ்- ஜிவி படத்துக்கு இதுவரையில் பெயர் வைக்கப்படவில்லை. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் முதல் பாடலை ஜிவி பிரகாஷ்-க்காக நடிகர் தனுஷ் பாடியுள்ளார். ‘டாடா பாய் பாய்’ என்னும் தனுஷ் பாடிய பாடல் குறித்த அறிவிப்பை ஜிவி பிரகாஷ் வெளியிட்டதிலிருந்து அந்த செய்தி வைரல் ஆகி வருகிறது. விரைவில் இந்தப் பாடலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் விரைவில் வெளியாகும் என்றும் ஜிவி தெரிவித்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version